maniyosai.com

You are here: Home செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் ஃபேஸ்புக்கின் புதிய பாதுகாப்பு அமைப்பு

ஃபேஸ்புக்கின் புதிய பாதுகாப்பு அமைப்பு

E-mail Print
Share/Save/Bookmark

Facebookநியூயார்க்: தனது பயனீட்டாளர்களுக்கு, புதிய, கணக்கு பாதுகாப்பு அமைப்பினை ஃபேஸ்புக் இணையதளம் அறிமுகப் படுத்த உள்ளது.

ஃபேஸ்புக் இணையதளம் நாளுக்கு நாள் இளைஞர்களிடையே புகழடைந்து வருகிறது. ஆனால், மற்றொருவரின் கடவுச்சொல்லை தெரிந்துக் கொண்டு, அவர்ளது ஃபேஸ்புக் கணக்கில் அத்துமீறி நுழையும் விஷமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இதனைக் கருத்தில் கொண்டு புதிய, கணக்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்றினை ஃபேஸ்புக் இணையதளம் அறிமுகப் படுத்தப் போகிறது.

அதன் மூலம், தனது ஃபேஸ்புக் கணக்குக்குள், வேறு யாராவது நுழைந்துள்ளார்களா என்பதை, எங்கிருந்து வேண்டுமென்றாலும் அறிந்துக் கொள்ளலாம்.

இதனை செய்ய, ஃபேஸ்புக் கணக்குக்குள் நுழைந்து, கணக்கு (Accounts) என்ற சுட்டியை சொடுக்க வேண்டும். பின்னர், கணக்கு அமைப்புகள் (Account Settings) என்ற சுட்டியை சொடுக்க வேண்டும். அதில் கணக்கு பாதுகாப்பு (Account Security) என்ற சுட்டியை சொடுக்கினால், அந்தக் குறிப்பிட்ட ஃபேஸ்புக் கணக்குக்குள் வேறு யாரெல்லாம் நுழைந்துள்ளார்கள், எந்த கருவியின் மூலம் நுழைந்துள்ளனர், எந்த ஊரில் இருந்து ஃபேஸ்புக் கணக்குக்குள் பிரவேசித்துள்ளனர் என்ற விவரங்கள் தெரிந்து விடும்.

ஒரு வேளை, அவ்வாறு எவரேனும் அத்துமீறி நம் ஃபேஸ்புக் கணக்குக்குள் நுழைந்திருந்தால், அவர்கள் பற்றிய விவரங்கள் ஒளிரும் இடத்திற்கு அருகிலேயே இருக்கும், 'பணியை முடி' (End Activity)  என்ற பொத்தானை சொடுக்கி, அழையா விருந்தாளிகளை வெளியேற்றலாம்.

பின்னர், மறக்காமல் நம் கடவுச்சொல்லை மாற்ற வேண்டும்.

ஃபேஸ்புக்கின் இந்த புதிய, பாதுகாப்பு அமைப்பு ஓரிரு வாரங்களில் அறிமுகப் படுத்தப் பட உள்ளது.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Friday, 03 September 2010 12:46 )  


More and More


கிட்டதட்ட

07 January 2012, 18.46 அறிவியல் / தொழில்நுட்பம்
பாதுகாப்பான ஃபேஸ்புக் பொழுதுகளுக்கு சில வழிகள்
ஒத்தக் கருத்து உடையவர்களை தேடி நட்புக் கொள்ளவும், பிரிந்த...மேலும்...
0 Comments , 216 Hits
29 March 2012, 20.28 வணிக செய்திகள்
அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி ஆண்டு சம்பளம் : ஃபேஸ்புக்கில் பணி
அலகாபாத்: மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் பயிலும்...மேலும்...
0 Comments , 71 Hits
09 January 2012, 20.16 அறிவியல் / தொழில்நுட்பம்
ட்விட்டர் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தடை
மும்பை : ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இந்திய...மேலும்...
0 Comments , 195 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits