6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்ட ஃபேஸ்புக் இணையதளத்தில் 50 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, ஃபேஸ்புக் என்பது ஒரு நாடாக இருந்தால், மக்கள்தொகையில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் நாடாக இருக்கும்.
ஆர்க்குட், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய நட்பு வட்டார இணையதளங்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம். இந்த இணையதளங்களுக்கு இடையே நிலவும் போட்டியில் ஃபேஸ்புக் இணையதளம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இந்த இணையதளம் மார்க் சூகெர்பெர்க் என்பவரால், அவரது 20வது வயதில், பிப்ரவரி 2004ல் தொடங்கப் பட்டது.
இந்த இணையதளத்தில் தற்போது 50 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது குறித்து ஃபேஸ்புக் இணையதளத்தின் நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் சூகெர்பெர்க் தனது இணையதளத்தில் எழுதியிருப்பதாவது:
“ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்து விட்டது. இப்பொழுது இன்னும் அதிக பேருக்கு தங்கள் நண்பர்களிடம் இணைந்திருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஃபேஸ்புக் வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல்.
உலகை இன்னும் விஸ்தாரமாக ஆக்கி, இன்னும் நிறைய பேரை இணைப்பதே எங்கள் குறிக்கோள்.”
இவ்வாறு மார்க் சூகெர்பெர்க் எழுதியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app



