இணைய தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் பற்றிய அறிமுகமேத் தேவையில்லை. மக்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்ற கூகுள் வலை தளத்தின் பக்கங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 100 கோடியாக அதிகரித்துள்ளது.அது மட்டுமின்றி கூகுளில் படங்களைத் (image) தேடும் பக்கத்திற்கும் புதிய வடிவமைப்பு செய்திருக்கின்றனர்.
இந்த புதிய வடிவமைப்பின் மூலம் ஒரு பக்கத்திற்கு 1000 படங்களை ஒரே சமயத்தில் நாம் பார்க்கலாம். இதனால் அடுத்தடுத்தப் பக்கங்கள் என போய் தேட வேண்டிய அவசியம் இல்லை.
இதுக் குறித்து தேடு இயந்திரத்தின் (search engine) துணைத் தலைவர் மரிஸா மேயர் குறிப்பிடும்போது, ‘இதனால் இது மிகப் பெரிய தேடு இயந்திரமாக உயர்ந்துள்ளது.’ என்கிறார். இருப்பினும் நிபுணர்கள் குறிப்பிடும்போது கூகுளுக்கு போட்டி தேடு இயந்திரமான ‘பிங்’ ஏற்கெனவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது என்கின்றனர்.
25 கோடிப் படங்களுடன் 2001ல் கூகுள் படங்கள் தேடுகளம் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்று 1000 கோடி படங்களாக உயர்ந்துள்ளது. இதைப் பார்க்கும்போது இணைய உலகம் எவ்வளவு செழுமையாக வளர்ந்துள்ளது எனத் தெரிகிறது எனவும் மரிஸா மேயர் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app




