மும்பை: இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ. 2500 கோடி செலவில், பெங்களூரு அருகே சர்ஜாபூரில் தனது 7வது சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது.
இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாவது:
”பெங்களூரு அருகே இருக்கும் சர்ஜாபூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க இன்ஃபோசிஸ் நிறுவனம் 202 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தியுள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க ரூ.2500 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கும் பணிகள், 2011 மார்ச் மாதம் முடியும். இந்த சி.பொ.மண்டலத்தால் 18000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.”
Want to write for Maniyosai?
Download our android app





