maniyosai.com

You are here: Home செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் இந்தியாவில் சர்வர் அமைக்க பிளாக்பெரி சம்மதம்

இந்தியாவில் சர்வர் அமைக்க பிளாக்பெரி சம்மதம்

E-mail Print
Share/Save/Bookmark

blackberryபுதுதில்லி: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தமது மொபைல் போக்குவரத்தை கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதிகளை பிளாக்பெரி நிறுவனம் செய்து தரா விட்டால், அந்நிறுவனத்துக்கு தடை விதிக்கப் போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில், பிளாக்பெரி மீது எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய இன்று (ஆக.30) உள்துறை செயலாளர்  தலைமையில் கூட்டம் கூடியது.

பிளாக்பெரி நிறுவனத்தின் மொபைல் போக்குவரத்தை அரசோ, வேறெந்த மூன்றாம் நபரோ கண்காணிக்க முடியாது. இந்த வசதியை தீவிரவாதிகள் தவறாக பயன் படுத்தி வருவதால், பிளாக்பெரி கைபேசிகள் மூலம் நடக்கும் மொபைல் போக்குவரத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு கண்காணிக்க அனுமதியளிக்க வேண்டும் என மத்திய அரசு கோரியிருந்தது. மற்ற நாடுகளும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தன. ஆனால், இதற்கு பிளாக்பெரி நிறுவனம் மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்தியாவில், வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கண்காணிப்பு தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், பிளாக்பெரி மொபைல் சேவைகளை தடை செய்யப்போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதற்கான கெடு நாளை முடிவடையும் நிலையில், பிளாக்பெரி மீது எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய இன்று மாலை 5 மணிக்கு உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் கூடியது.

இதற்கிடையே, இந்தியாவில் சர்வர் அமைக்க பிளாக்பெர்ரி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், பிளாக்பெரி மொபைல் போக்குவரத்தை மத்திய அரசு எளிதில் கண்காணிக்க முடியும். அதே போல், இந்திய அரசு கேட்கும் விபரங்களையும் பிளாக்பெரி தர சம்மதம் தெரிவித்துள்ளது.  மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அடுத்த 60 நாட்களில்  ப்ளாக்பெர்ரி செல்போன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளது.

 

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 30 August 2010 19:48 )  


More and More


கிட்டதட்ட

09 February 2012, 12.09 செய்திகள்
தமிழக சட்டப்பேரவையில் செல்போனுக்கு தடை
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்த...மேலும்...
0 Comments , 128 Hits
29 March 2012, 20.28 வணிக செய்திகள்
அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி ஆண்டு சம்பளம் : ஃபேஸ்புக்கில் பணி
அலகாபாத்: மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் பயிலும்...மேலும்...
0 Comments , 71 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits