லாஸ் ஏஞ்சல்ஸ்: " லா டிடி" என்னும் புதிய மென்பொருள் ஒன்று ஐ-போனில் அறிமுகமாகியுள்ளது. நீங்கள் எவ்வளவு மோசமாக பாடினாலும் பரவாயில்லை, அதனை ஒழுங்குபடுத்தி, அதற்கு இசைகூட்டி அழகான பாடலாக்கிவிடும் இந்த "லா டி டி" மென்பொருள்.
ஜியார்ஜியா டெக்கில் உள்ள "மியூஸிக் இன்டெலிஜென்ஸ்" லேப்'பில் அதன் இயக்குனர் பராக் கார்டியாவினால் உருவாக்கப்பட்ட "லா டி டி" இசை மென்பொருள் வெறும் இசைக்காக மட்டும் அல்ல, கணிதம், மற்றும் கற்பனை வளம், இசை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தது என்று கூறப்படுகிறது.
இந்த மென்பொருளைப் பற்றி கார்டியா கூறியுள்ளதாவது:
" இசையை புரிந்துகொள்ளுவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் நீண்டகால பயிற்சி தேவை. இசை என்பது யாராலும் செய்யமுடியாத கம்ப சூத்திரம் அல்ல. இசைக்க விரும்பும் யாராக இருந்தாலும் அவர்களை ஊக்குவிப்பதற்காகவே நாங்கள் லா- டி- டி- யினை உருவாக்கியுள்ளோம். ட்விட்ட்ர் போன்ற சமூக இணைப்புதளங்களை கையாளுவது எவ்வளவு எளிதோ அவ்வளவு எளிது இந்த லா- டி டி- யை பயன்படுத்தலாம்."
இவ்வாறு பராக் கார்டியா கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app


