maniyosai.com

You are here: Home செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் ட்விட்டர் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தடை

ட்விட்டர் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தடை

E-mail Print
Share/Save/Bookmark

twitterமும்பை : ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது. சிட்னியில் நடந்த போட்டி தொடரின் போது, மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் இந்திய வீரர் விராத் கோலி தன் நடு விரலை காண்பித்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன் நடு விரல் செய்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருந்த விராத் கோலி, தன் தாய் மற்றும் சகோதரி குறித்து ரசிகர்கள் ஆபாசமாக பேசியதாலேயே அவ்வாறு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கிரிக்கெட் ரசிகர்களும், மாற்று அணி வீரர்களும் பதிலளித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், கிரிக்கெட் போட்டி தொடர்களின் போது வீரர்களின் கவனம் முழுவதும் ஆட்டத்தில்தான் இருக்க வேண்டும் என்பதாலும், சமூக வலைதளங்களில் எழுதுவது அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பி விடுகிறது என்பதாலும், இந்திய அணி வீரர்கள் ட்விட்டர் போன்ற இணையதளங்களில் ஆட்டம் குறித்த கருத்துக்கள் எதையும் எழுதக் கூடாது என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

27 January 2012, 20.16 அறிவியல் / தொழில்நுட்பம்
பதிவுகளை வடிக்கட்ட ட்விட்டர் புதிய வழிமுறை
ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு தகுந்த மாதிரி, தனது...மேலும்...
0 Comments , 212 Hits
29 March 2012, 20.28 வணிக செய்திகள்
அலகாபாத் மாணவருக்கு ரூ.1.34 கோடி ஆண்டு சம்பளம் : ஃபேஸ்புக்கில் பணி
அலகாபாத்: மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் பயிலும்...மேலும்...
0 Comments , 71 Hits
05 February 2012, 18.03 அறிவியல் / தொழில்நுட்பம்
ஃபேஸ்புக் வயது 8
ஃபேஸ்புக் சமூக வலைதளம் எட்டாவது ஆண்டுக்குள் அடியெடுத்து...மேலும்...
0 Comments , 211 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits