கணிப்பொறி விஞ்ஞானிகள் ட்விட்டரில் மக்களின் மனநிலை கண்டறியும் மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தி பல கோடி அமெரிக்கர்களின் மனநிலைக் குறித்து கண்டறிந்துள்ளனர். இதன் முடிவாக அவர்கள் கிழக்கு அமெரிக்காவில் இருப்பவர்களை விட மேற்கு அமெரிக்காவில் இருப்பவர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
அது மட்டுமின்றி ஞாயிற்றுக் கிழமைகளில் நாடே மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வியாழக் கிழமைகளில் வருத்தம் மேலிடுவதாகவும் கண்டுப்பிடித்துள்ளனர்.
ட்விட்டரில் பதிவான 30 கோடி பதிவுகளை ஆய்வு செய்து இந்த முடிவினை வெளியிட்டுள்ளனர். ட்விட்டரில் ’காதல்’, ‘சொர்க்கம்’ போன்ற வார்த்தைகளை பதிவு செய்தால் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், ’தற்கொலை’, ’இறுதிச் சடங்கு’ போன்ற வார்த்தைகளை வருத்தத்திற்கு அடையாளமாகவும் வகைப் படுத்தியுள்ளனர்.
ஆனால் இதுக் குறித்து ஒரு சாரார் கூறுகையில் இதை மிகத் துல்லியமானதாகக் கருத முடியாது, ஏனெனில் ஒருவர் ‘நான் மகிழ்ச்சியாக இல்லை’ என பதிவு செய்தால் அதில் ’மகிழ்ச்சி’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதால் அவர் ஆனந்தமாக இருப்பதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கூறுகிறார்கள்.
Want to write for Maniyosai?
Download our android app


