maniyosai.com

You are here: Home செய்திகள் மேட்டூர் அணை விநாடிக்கு 12000 கன அடி தண்ணீர்: முதல்வர் கருணாவிதி உத்தரவு

மேட்டூர் அணை விநாடிக்கு 12000 கன அடி தண்ணீர்: முதல்வர் கருணாவிதி உத்தரவு

E-mail Print
Share/Save/Bookmark

TN Governmentசென்னை:மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீரை திறந்து விட தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (செப்.1) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இன்றைய (1.9.2010) காலை பத்திரிகையில் (தினமலர்), குறுவை சாகுபடி பாதிக்கும்; சம்பாவுக்கு வாய்ப்பில்லை, கடைமடைக்குத் தண்ணீர் இல்லை என்ற தலைப்பில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியாகியுள்ளது.

போதிய நீர் வரத்து இல்லாததால், வழக்கமாக ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, ஜூலை 28-ந்தேதி திறக்கப்பட்டது. 2009 -ம் ஆண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்டு 31 வரை கர்நாடகத்திலிருந்து 81 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கப் பெற்றது. ஆனால் இந்த ஆண்டு இதே காலத்தில் 39 டி.எம்.சி. தண்ணீரே கிடைக்கப் பெற்றது. அதாவது, சென்ற ஆண்டை ஒப்பிடும்போது பாதியை விடக் குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கப் பெற்றுள்ளது.

இது குறித்து முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ஆகஸ்டு மாதம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், மேட்டூரிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் அளவு 10,000 கன அடியில் ஆரம்பித்து பின்பு 8,000 கன அடியாகக் குறைத்து வழங்கப்பட்டு வந்தது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் ஆட்சித் தலைவர்களின் வேண்டுகோளின்படி இன்றிலிருந்து 12,000 கன அடி தண்ணீரை வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

தொடர்ந்து சம்பா சாகுபடி சிறப்பாக நடைப்பெறத் தேவையான அளவு தண்ணீரை வழங்க தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:17 )  


More and More


கிட்டதட்ட

26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 216 Hits
20 January 2012, 20.13 தலைப்புச் செய்திகள்
நாகை துறைமுக மேம்பாட்டிற்கு ரூ.380 கோடி நிதி : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: நாகப்பட்டினம் துறைமுகத்தின் மேம்பாட்டிற்கு ரூ.380 கோடி நிதி...மேலும்...
0 Comments , 118 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits