சென்னை: காவல் துறையினரால் தாக்கப் பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவரின் மருத்துவ செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்வதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் அசோக் குமார் என்ற சட்டக் கல்லூரி மாணவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், பேருந்து நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அசோக் குமார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டார். விசாரணையின் போது அவரை காவல் துறையினர் கடுமையாக தாக்கியதாக கூறப் படுகிறது.
இதனைத் தொடர்ந்து அசோக் குமார், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு, அவரது பெற்றோரிடம் போதிய பணம் இல்லை என்பது தமிழக அரசின் கவனத்துக்கு சென்றது. இதனால், அசோக் குமாரின் மருத்துவ செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதற்கான நிதி முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப் படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app




