ஐதரபாத்: மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசாத், ஆந்திர போலீஸாரால் இன்று அதிகாலை (ஜூலை 2) சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் இருந்து சில மாவோயிஸ்டுகள் ஆந்திரா வருவதாக மாநில உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆந்திர மாநிலம் அதிலாபாத் மாவட்டம் முழுவதும் காவல் துறை சோதனை பலப் படுத்தப் பட்டது. நேற்று இரவு (ஜூலை 2) 11 மணியளவில் வாங்கிதி சோதனை சாவடியில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, மாவோயிஸ்டுகள் பயணம் செய்த வாகனம் அங்கு வந்தது.
திடீரென, மாவோயிஸ்டுகள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். காவல் துறையினரும் பதிலுக்கு சுட்டனர். இந்த துப்பாக்கி சூடு நள்ளிரவு 2 மணி வரை நடந்தது.
இதில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப் பட்டனர். அதில் ஒருவர் சிபிஐ (மாவோயிஸ்டு) மத்திய குழுவின் உறுப்பினரும், மாவோயிஸ்டு இயக்கத்தின் செய்தி தொடர்பாளருமான ஆசாத் ஆவார். மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை.
இந்த தகவலை ஆந்திர காவல் துறை தெரிவித்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app




