ஜான்பூர்: பெண்ணின் வயிற்றில் இருந்து துண்டு கண்டெடுக்கப் பட்டு அறுவைசிகிச்சை செய்து அகற்றப் பட்டது.
உத்திரபிரதேச மாநிலம் ரூப்சந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கீதாதேவி (38). இவர் வயிற்றில் புற்றுநோய் இருந்ததால், ஜூலை 7ம் தேதி அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நடந்தது.
10 நாட்கள் கழித்து கீதாதேவி கடும் வயிற்று வலியால் துடித்தார். அல்ட்ரா சவுண்ட் மூலம் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ திடப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
கீதாதேவிக்கு நேற்றிரவு (ஆக.6) மீண்டும் அறுவைசிகிச்சை செய்யப் பட்டது. அப்போது வயிற்றில் இருந்து துண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டு அகற்றப் பட்டது. முந்தைய அறுவை சிகிச்சையின் போது, இந்த துண்டை தவறுதலாக வயிற்றில் வைத்து தைக்கப் பட்டதாக நேற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது கீதாதேவி நலமாக உள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





