புதுதில்லி: வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கு இது வரை 28,054 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளதாக மத்திய நகர்புற மேம்பாடு துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று (ஆக.9) காமன்வெல்த் போட்டிகள் பற்றி நடந்த விவாதத்தின் போது ஜெய்பால் ரெட்டி கூறியதாவது:
’காமன்வெல்த் போட்டிகளுக்கு இது வரை 28,054 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. அதில், 16,560 கோடி ரூபாயை தில்லி அரசிடம் வழங்கப் பட்டுள்ளது. தில்லி அரசிடம் கொடுக்கப் பட்டுள்ள தொகையில் 670 கோடி ரூபாயை மைதானங்கள் கட்டவும், மீதி பணத்தை தில்லி நகர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் செலவிடப் பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளை சிறப்பாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.’ இவ்வாறு ஜெய்பால் ரெட்டி கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app




