வாஷிங்டன்: அன்னை தெரஸாவின் சேவைகளை நினைவு கூரும் வகையில் அமெரிக்க அஞ்சல் துறை அவரது அஞ்சல் தலையை செப்டம்பர் 5ம் தேதி வெளியிடவுள்ளது.
இது குறித்து அமெரிக்க அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
“1979ம் ஆண்டு தனது மனிதநேய பணிகளுக்காக நோபல் பரிசை வென்ற அன்னை தெரஸாவை நினைவு கூரும் வகையில் செப்டம்பர் 5ம் தேதி அவருடைய அஞ்சல் தலையை வெளியிடப் போகிறோம்.
ரோமன் கதோலிக்க மதத்தை சேர்ந்தவரும், அமெரிக்காவின் கெளரவ குடியுரிமை பெற்றவருமான அன்னை தெரஸா, இந்தியாவில் 50 ஆண்டு காலம், உடல் நலம் குன்றியோருக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை புரிந்தார்.” இவ்வாறு அமெரிக்க அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 5ம் தேதி அன்னை தெரஸாவின் நினைவு தினமன்று வெளியிடப் படும் இந்த நினைவு தபால் தலை சில நாட்களுக்கு மட்டுமே பொது மக்களுக்காக விற்பனை செய்யப் படும் என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app




