சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் முன் ஆர்பாட்டம் செய்த வைகோ, பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து ஜூலை 14ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப் போவதாக வைகோ ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி அவர்கள் இன்று (14/07/2010) ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களோடு 300 பேர் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
கைது செய்யப்பட்ட வைகோவும், நெடுமாறனும் மீண்டும் 16ம் தேதி வேதாரண்யத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட இருப்பதால் அவர்கள் இன்று மாலையே விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Want to write for Maniyosai?
Download our android app





