பெங்களூரு: 1984ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அன்றைய தலைவர் வாரன் ஆண்டர்சன் கைது செய்யப் பட்டு உடனே விடுவிக்கப் பட்டதற்கு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியே காரணம் என ராஜீவ் காந்தியின் அப்போதைய பிரதான செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி, “ராஜ்ஜிய சபை உறுப்பினர் பதவிக்காக, சிவ சேனா ஆதரவுடன் அண்மையில் பாஜகவில் இணைந்து விட்டார் அலெக்சாண்டர். அவர் தற்போது காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். அவரது கருத்து உள்நோக்கம் கொண்டதாகும்.
வாரன் ஆண்டர்சன் விடுதலை செய்யப் பட்டதற்கு ராஜீவ் காந்தியின் அப்போதைய பிரதான செயலாளரான அலெக்சாண்டரே காரணம் என கருதுகிறேன்.” எனக் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app




