maniyosai.com

You are here: Home செய்திகள் கலைஞருக்கு என்னைப் பார்த்து பயம்: விஜயகாந்த் மீண்டும் வம்படி

கலைஞருக்கு என்னைப் பார்த்து பயம்: விஜயகாந்த் மீண்டும் வம்படி

E-mail Print
Share/Save/Bookmark

vijayakanthதிண்டிவனம்: கலைஞர் தன்னை பார்த்து பயப்படுவதாக தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயகாந்த் பேசியதாவது:

சில அரசியல்வாதிகள் என்னை பற்றி ஏதேதோ பேசி வம்புக்கு இழுக்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்லும் வாய்ப்பாக இந்த திருமண விழா அமைந்துவிட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பின் வந்தவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் எந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்? தற்போது விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் என்று கலைஞர் கூறுகிறார். மின்சாரம் இல்லை அதனால்தான் கொடுக்கிறார்.

தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் கலைஞர், 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்ததாக கூறுகிறார். இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதற்காக எந்த திட்டத்தையாவது கலைஞர் கொண்டு வந்துள்ளாரா? கலைஞருக்கு என்னைப் பார்த்து பயம். நான் உங்களிடம் கூட்டணிக்காக என்றைக்காது தூது விட்டேனா? நான் கூட்டணி குறித்து இது வரை பேசவில்லையே?

வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் நல்ல கட்சிகளுடன் நான் கூட்டணி அமைப்பேன். 2 கட்சிகளும் ஊழல் செய்துள்ளன. தேமுதிகவிடம் ஆட்சியை ஒரு முறை ஒப்படைத்துப் பாருங்கள்...

இவ்வாறு நடிகர் விஜயகாந்த் பேசினார்.

அண்மையில், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் ஊழல் கட்சிகள் என விஜயகாந்த் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி விஜயகாந்த் கறுப்பு பணம் வைத்திருப்பதை சுட்டிக் காட்டினார். இந்நிலையில், மீண்டும் திமுக, அதிமுகவை விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

12 February 2012, 10.39 தலைப்புச் செய்திகள்
திமுகவுக்கு இளைஞர்கள் ஆதரவு  : ஸ்டாலின் பேச்சு
நாகர்கோவில் : திமுகவுக்கு வலுசேர்க்கும் வகையில் இளைஞர்கள்...மேலும்...
0 Comments , 211 Hits
05 February 2012, 12.28 செய்திகள்
நாகரீக எல்லையைத் தாண்டிய விஜயகாந்த் : திருமா. தாக்கு
சிதம்பரம் : அரசியல் பக்குவமின்மை காரணமாக நாகரீகத்தின் எல்லையை...மேலும்...
0 Comments , 146 Hits
15 May 2012, 20.08 செய்திகள்
ராசாவுக்கு பிணை : கருணாநிதி மகிழ்ச்சி
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்...மேலும்...
0 Comments , 15 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits