maniyosai.com

You are here: Home செய்திகள் முதல்வரின் குடும்பத்தை வம்புக்கு இழுப்பதா? - விஜயகாந்த்துக்கு ஆற்காடு வீராசாமி கண்டனம்

முதல்வரின் குடும்பத்தை வம்புக்கு இழுப்பதா? - விஜயகாந்த்துக்கு ஆற்காடு வீராசாமி கண்டனம்

E-mail Print
Share/Save/Bookmark

arcot veerasamyசென்னை: முதல்வர் கருணாநிதி நாகரீகமாக அறிக்கை வெளியிட்டிருக்கும் போது, விஜயகாந்த் அநாகரீகமாக முதல்வர் குடும்பத்தை வம்புக்கு இழுக்கலாமா என மின்சார துறை அமைச்சர் ஆற்காடு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: விஜயகாந்த் விடுகின்ற அறிக்கைகள் பற்றியோ, பேட்டிகள் பற்றியோ பொதுவாகக் கழக தலைவர் கலைஞர் கருணாநிதி  எதுவும் கருத்து தெரிவிப்பதில்லை.ஆனால் அவர் மட்டும் தொடர்ந்து திமுகவைப் பற்றியும், தலைவர் கலைஞர் கருணாநிதி பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்தார். அந்த வரிசையில்தான் அவர் 23-8-2010 அன்று விடுத்த அறிக்கையில், தேவையில்லாமல் திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்; அவர்களோடு கூட்டணி கிடையாது என்று சொல்லியிருந்தார்.

திமுகவைப் பொறுத்த வரையில் தேமுதிகவுடன் கூட்டணி என்று நாங்கள் என்றைக்கும் சொன்னதில்லை. அப்படியிருக்கும் போது விஜயகாந்த்தான் முதலில் வெளியிட்ட அறிக்கையில் திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் என்று வம்பை விலைக்கு வாங்கினார்.
அவர் அவ்வாறு எழுதியதால்தான் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அதற்கு பதில் சொல்லி விஜயகாந்தின் வரலாறு என்ன என்பதை விளக்கி, அப்படிப்பட்டவர் திமுகவைப் பற்றி சொல்லாமா என்று கேட்டிருந்தார்.

உடனே விஜயகாந்த் இன்று வரிந்து கட்டிக்கொண்டு பெரியதோர் அறிக்கையினை முதல்வர் கருணாநிதியைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வெளியிட்டிருக்கிறார்.முதல்வர் நாகரீகத்தோடு விஜயகாந்தைப் பற்றி எழுதும்போது, விஜயகாந்த் தேவையில்லாமல் முதல்வருடைய குடும்பத்தினரைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்.

மேலும் முதல்வர் தனது வீட்டையே மருத்துவமனைக்கு எழுதிக் கொடுத்திருப்பதைப் பற்றியும், அவர் தனது வாழ் நாளுக்குப் பிறகு அதனைத் தரவிருப்பதைப் பற்றியும் விஜயகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.முதல்வர் இப்போது இருக்கும் வீட்டை இப்போதே தர்மம் செய்துவிட்டால் பிறகு அவர் எங்கே இருப்பார் என்பது கூட அந்த நடிகருக்குத் தெரியவில்லையா?.

முதற்கட்டமாக விஜயகாந்த் தான் வம்பை விலைக்கு வாங்கி, அவருக்கு கலைஞர் பதில் அளித்தவுடன் அதனைத் தாங்கிக் கொண்டு முறையாக பதிலளிக்க முடியாமல், தனிப்பட்ட முறையிலே விமர்சனம் செய்திருப்பதிலிருந்து அவர் எப்படிப்பட்ட அரை வேக்காட்டு அரசியல்வாதி என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

01 April 2012, 09.55 செய்திகள்
பட்ட காலில் படும் : மின் கட்டண உயர்வு குறித்து விஜயகாந்த் கருத்து
சென்னை: பட்ட காலில் படும் என்பது போல ஏற்கனவே விலைவாசி உயர்வினால்...மேலும்...
0 Comments , 55 Hits
31 March 2012, 20.14 செய்திகள்
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சென்னை: மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக...மேலும்...
0 Comments , 53 Hits
31 March 2012, 18.32 செய்திகள்
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி செய்யப் படும்...மேலும்...
0 Comments , 93 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits