maniyosai.com

You are here: Home செய்திகள் இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறோம் - 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகவல்

இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறோம் - 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகவல்

E-mail Print
Share/Save/Bookmark

admk logoசென்னை: திமுக பொது குழு கூட்டத்தில் பங்கேற்றது, அழகிரியை சந்தித்தது போன்ற செயல்களில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் இன்னும் அதிமுகவிலேயே இருப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்களான ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமீபத்தில் நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். ராஜேந்திரன், அழகிரியை சந்தித்து பேசினார். அவர்களின் சந்திப்பின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் பத்திரிகைகளிலும்
வந்தன.

இதையடுத்து 2 எம்எல்ஏக்களையும் கட்சித் தாவல் சட்டப் படி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 4)  ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் இருவரும் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கக் கடிதம் அளித்தனர்.

அதில், நாங்கள் இன்னும் அதிமுக எம்எல்ஏக்களாகத் தான் உள்ளோம். அதிமுகவில் தொடரவே விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில், கோவில்பட்டி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், அவர்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா செங்கோட்டையன் என்னிடம் மனு கொடுத்தார்.இதையடுத்து, 2 எம்எல்ஏக்களும் 8ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை ஏற்று எம்.எல்.ஏக்கள், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் இன்று விளக்க மனுக்களை என்னிடம் கொடுத்துள்ளனர்.

அதில் 2 பேரும் அதிமுகவில் நீடிப்பதாகவும், கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் காரணமாக தங்களைப் பற்றி மனு கொடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர்களை நேரில் சந்தித்து தொகுதி பற்றிய குறைகளை கூறுவதற்காகவே தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விளக்க மனு ஆய்வில் உள்ளது என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

06 January 2012, 20.58 செய்திகள்
புயல் நிவாரணம்: அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு - கருணாநிதி பேட்டி
சென்னை: தானே புயல் நிவாரண பணிகளில் அதிமுக தலைமையிலான தமிழக அரசுக்கு...மேலும்...
0 Comments , 143 Hits
18 March 2012, 18.04 தலைப்புச் செய்திகள்
சங்கரன்கோவிலில் விறுவிறு வாக்குப்பதிவு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்...மேலும்...
0 Comments , 50 Hits
10 April 2012, 18.22 செய்திகள்
கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
விருதுநகர்: கொலையாளியை தப்ப வைக்க சாட்சியங்களை மறைத்ததாகக் கூறி...மேலும்...
0 Comments , 41 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits