maniyosai.com

You are here: Home செய்திகள் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் மீது கைது வாரண்ட்: பத்திரிகை செய்தி

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் மீது கைது வாரண்ட்: பத்திரிகை செய்தி

E-mail Print PDF
Share/Save/Bookmark

wilileaksஸ்டாக்ஹாம்: அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை இணையதளம் மூலம் அம்பலப் படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்க் மீது கற்பழிப்பு மற்றும் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்ட இரண்டு குற்றங்களுக்காக ஸ்வீடன் காவல் துறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனை, ஸ்வீடன் அரசு வழக்கறிஞரின் அலுவலகமும் உறுதிப் படுத்தியுள்ளது.

இராக் மற்றும் அஃப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் செய்த அத்துமீறல்களை அம்பலப் படுத்தும் வகையில் அமெரிக்க ராணுவத்தின் 76,000 ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் அண்மையில் வெளியிட்டது. இது ஒபாமா அரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ராணுவ ஆவணங்களை வெளிப் படுத்துவது பொறுப்பற்ற செயல் என அமெரிக்க ராணுவம் விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் போர் குற்றங்களை அம்பலப் படுத்தும் மேலும் 15,000 ஆவணங்களை வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாங்க் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இது அமெரிக்க அரசுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஜூலியன் அசாங்க் மீது கற்பழிப்பு மற்றும் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்ட இரண்டு குற்றங்களுக்காக ஸ்வீடன் காவல் துறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனை, ஸ்வீடன் அரசு வழக்கறிஞரின் அலுவலகமும் உறுதிப் படுத்தியுள்ளது.

இந்த செய்தியை விக்கிலீக்ஸ் இணையதளம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:

“அசாங்க் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு பற்றி இன்று (ஆக.21)தெரிய வந்தது. அசாங்க் மீது விக்கிலீக்ஸ் குழு உயர்ந்த மதிப்பு வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அவருக்கு விக்கிலீக்ஸ் குழு உறுதுணையாக இருக்கும். தன் மீதான அவப்பெயரை அசாங்க் சட்ட ரீதியாக களைவார்.விக்கிலீக்ஸின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடரும்.”

இவ்வாறு விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 21 August 2010 20:57 )  


More and More


கிட்டதட்ட

05 February 2012, 12.07 தலைப்புச் செய்திகள்
யுவராஜ் சிங் உடல்நிலை கவலைக்கிடம் ? - அமெரிக்காவில் தீவிர சிகிச்சை
புதுதில்லி : இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல்...மேலும்...
0 Comments , 189 Hits
18 April 2012, 12.49 தலைப்புச் செய்திகள்
ராணுவ ஊழல் : 3 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
புதுதில்லி: ராணுவ பயன்பாட்டிற்கு தேவையான தாத்ரா ட்ரக்குகளை...மேலும்...
0 Comments , 101 Hits
26 March 2012, 11.40 செய்திகள்
14 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றனர் : இந்திய ராணுவ தலைமை தளபதி பரபரப்பு பேட்டி
புதுதில்லி: தரம் தாழ்ந்த வாகனங்களை ராணுவ பயன்பாட்டிற்கு வாங்க...மேலும்...
0 Comments , 88 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits