ஸ்ரீகாகுளம்: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு நான் இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை என ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டித் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் பலியானார்.
அதைத் தொடர்ந்து ரோசய்யா ஆந்திர முதல்வரானார். தந்தை இறந்து ஆறு மாதங்கள் கழித்து அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல் யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை பல புதிய பிரச்சினைகளை உருவாக்கும் என்று எண்ணி காங்கிரஸ் மேலிடம் இந்த யாத்திரையை எதிர்த்தாலும் ஜெகன்மோகன் ரெட்டி அசராமல் யாத்திரையைத் தொடர்கிறார்.
இதற்கிடையே தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஆந்திர முதல்வர் ரோசய்யா ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாம். அதற்கான முயற்சிகளில் ஈடுப்படலாம். ஆனால் அதை அடைவதற்கு ஒரு முறை உண்டு எனக் கூறினார்.
இதற்கு இன்று (12/07/2010) பதிலளித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி இந்த யாத்திரை தனது தந்தையின் மறைவு செய்திக் கேட்டு உயிரிழந்தவர்களின் ஆறுதலுக்காகவே நடத்தப்படும் ஒன்று. முதல்வராகும் நோக்கத்தில் இந்த பயணம் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் இந்த யாத்திரையைக் கொச்சைப் படுத்த வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.
Want to write for Maniyosai?
Download our android app


