maniyosai.com

You are here: Home ஆன்மீகம் ஆலய பிரவேசம் ஆலயபிரவேசம்-மந்திராலயம்

ஆலயபிரவேசம்-மந்திராலயம்

E-mail Print PDF
Share/Save/Bookmark

Sri Raghavendra Swamy“மாதா, பிதா, குரு, தெய்வம்.” என்கிறோம். இதில் நம் அறிவு கண்களை திற்ந்து வைக்கும் குருவை தெய்வத்திற்கும் மேலாக வணங்குகிறோம்.

இங்கே நாம் குரு என்று குறிப்பிடுவது நமது பள்ளிக் கூட ஆசிரியர்களை மட்டுமல்ல; நம்மில் ஒருவராக பிறந்து உலக ஆசைகளைத் துறந்து துறவறம் பூண்டு மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களை நல்வழிப்படுத்திய மகான்களையும் இந்த ‘குரு’ என்ற சொல் குறிக்கிறது.ஆம். நம் நாட்டில் கோயில்களுக்கு இணையாக நிறைய மடங்களும் இருக்கின்றன.அங்கே தினமும் பிரார்த்தனைகளும் நடந்து வருகின்றன.அவற்றில் இன்று நாம் பார்க்கப் போவது 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதல்லாமல் இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டு இருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்திராலயத்தில் ஜீவ சமாதியடைந்த குரு ராகவேந்த்திரரைப் பற்றியும் மந்த்திராலயத்தைப் பற்றியும் இவ்வார ஆலயப் பிரவேசம் பகுதியில் பார்க்கலாம்.

குரு ராகவேந்திரர் முன் அவதாரம்

சங்கு கர்ணன் என்ற தேவன் ஒரு சாபத்தின் காரணமாக பூலோகத்தில் அரக்க மன்னன் ஹிரண்ணிய கசிபுவின் மகன் பிரஹல்லாதனாய் பிறந்தார். மஹா விஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் பிரஹல்லாதன் தன் தந்தை அரக்கன் ஹிரண்ணிய கசிபுவை வதம் செய்ய  நரசிம்ஹ அவதாரம் எடுத்தார். தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். பாஹ்லிகர் மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு
எதிராக போரிட்டாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார் . தன் அடுத்த பிறவியில்  வியாசராஜராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை வழிபட்டார். அப்பிறவியில் தான் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும்  குருராகவேந்திரராக அவதரித்தார்.

வாழ்க்கை  வரலாறு

திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வெங்கடாஜலபதியின் அருளால் மூன்றாவது  பிள்ளையாக தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தார். அவர்கள் அந்த குழந்தைக்கு வெங்கடநாதன் என்று பெயரிட்டனர்.

வெங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் திரு குருராஜ பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப்படைக் கல்வியை அவர் மைத்துணர் திரு லக்ஷ்மீ நரசிம்ஹாசாரியாரிடம் மதுரையில் பயின்றார்.

வெங்கடநாதர்  மதுரையிலிருந்து திரும்பியவுடன்  சரஸ்வதி என்பவரை மணந்தார். அவரது திருமணத்திற்கு பிறகு அவர்கள் கும்பகோணத்திற்க்கு குடியேறினர். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் கற்று தேர்ந்தார். சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களின் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் இசையில்  நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும்  கற்பித்த வெங்கடநாதர் அதற்கு எந்த பணமும் எதிர்ப்பர்ப்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும்  அவர் குடும்பமும் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். இவ்வாறு வறுமையில் வாடியும் அவர் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார்.

துறவறம்

வெங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தர் தனக்கு அடுத்த மட பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது வெந்கதநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று  பகவான் கூறியதாக கனவு கண்டார். ஸுதீந்திரரும்  அவர் விருப்பத்தை வெங்கடநாதரிடம் தெரிவித்தார். வெங்கடநாதர் அவர் மனைவியையும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தை கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் விருப்பத்தினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.


வெங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்

ராகவேந்திர சுவாமிகளின் கடைசி உரை மற்றும் பிருந்தாவன பிரவேசம்:
1671 ஆம் ஆண்டு ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்ககு முன் தன் பக்தர்களுக்கு மனம் நெகிழவைக்கும் வகையில் அவர்களை நல்வழிப்படுத்த ஒரு உரையாற்றினார். 
• சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
• நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.
• சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினானும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது. சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
• கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக   இருக்கக்கூடாது'. கடவுளின் மேலாண்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்த்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மட்டுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.


மந்திராலய வரலாறு
ஆந்திர மாநிலம் ஆதோனி அருகே, துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த்துள்ளது மந்திராலயம். இந்த இடம்தான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த இடம். இவ்வூருக்கு ராகவேந்திர சுவாமிகளின் மடம் இருப்பது மட்டுமே சிறப்பல்ல. இந்த மடத்துடன் சம்மந்தப்பட்ட ஒரு உண்மைக் கதையும் இதன் சிறப்பினை பன்மடங்காக்குகிறது.

இது பதினைந்தாம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவம். அப்பொழுது மடத்திற்காக அளிக்கப்பட்ட நிலத்தைத் திரும்பபெற வேண்டி ஆயத்தங்கள் நடந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அதை விசாரிக்க சர் தாமஸ் முன்றோ என்பவர் நியமிக்கப்பட்டார். அவரும் விசாரணைக்காக மடத்திற்கு சென்று பயபக்தியாக செருப்புகளை வெளியே கழற்றிவிட்டு, தொப்பியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு பிருந்தாவனத்திற்கு எதிரில் சென்று நின்றதுதான் தாமதம், அவர் சற்றும் எதிர்ப்பார்க்காத, சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அதிசயம் நிகழ்ந்தது. மடத்திற்கு அந்த இடம் எவ்வளவு அவசியம் என்று எடுத்துரைக்க அந்த ராகவேந்திர சுவாமிகளே தன் சமாதியிலிருந்து உயிர்பெற்று எழுந்து வந்து முன்றோவுடன் சரளமான ஆங்கிலத்தில் உரையாடினார். ஆனால் அங்கு கூடியிருந்த மற்றவர்களால் ராகவேந்திர சுவாமியைப் பார்க்கவும் முடியவில்லை, அவர் குரலைக் கேட்கவும் முடியவில்லை. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுடன் நேருக்கு நேராக ஆலோசனை நடத்திய முன்றோ உடனே அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.

பூஜை மற்றும் உற்சவங்கள்

தினமும் காலை 6 மணிக்கு மடம் திறந்தவுடன் மடத்தை சுத்தம் செய்து பின்னர், பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து காவியுடை அணிவித்து, பூ அலங்காரம் செய்து, அர்ச்சனை, தீபாராதனை ந்டைப்பெறுகிறது. இது முடிந்தவுடன் பக்தர்களுக்கு அட்சதை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும். மீண்டும் மாலை தீபாராதனை மற்றும் நடைப்பெறும். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாட்கள் ஆராதனை விழா விமரிசையாக நடைப்பெறுகிறது.

எப்படி செல்வது?

தினமும் இரவு 8 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து APSRTC பேருந்து நேரடியாக மந்திராலயம் செல்கிறது. ரயில் மார்க்கமாக செல்லவேண்டுமென்றால் சென்னையிலிருந்து மும்பை செல்லும் அனைத்து ரயில்களிலும் செல்லலாம்.  மந்திராலயம் அருகிலிருக்கும் ஆதோனி என்ற ஊரில் இறங்கினால் அங்கிருந்து நிறைய பேருந்துகள் இருக்கின்றன.

அழகு எழில் கொஞ்சும் துங்கபத்திரை நதிக்கரையோரம் அமைந்திருக்கும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மடத்திற்கு ஒருமுறை சென்று வந்தால் நிச்சயம் நம் பிரார்த்தனை நிறைவேறுவதோடு இன்ஸ்டண்டாக மன அமைதியும் கிடைக்கும்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

Banner
Maniyosai Ads

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits